Home இலங்கை சமூகம் செம்மணியில் மேலும் ஒருமனிதப் புதைகுழி..! ஆய்வுகளில் வெளியான தகவல்

செம்மணியில் மேலும் ஒருமனிதப் புதைகுழி..! ஆய்வுகளில் வெளியான தகவல்

0

யாழ். அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் தற்போது
தோண்டப்படும் மனிதப் புதைகுழி இடத்துக்கு மேலதிகமாக மற்றுமோர் மனிதப் புதைகுழி
இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய பூர்வாங்க ஆய்வுகளில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தின் கவனத்துக்கு

எனவே, அந்தப் பகுதியை முழுமையாக மனிதப் புதைகுழி காணப்படும் பிரதேசமாகப்
பிரகடனப்படுத்துமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

இதனால் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பல நூறு பேர் ஒரே
காலகட்டத்தில் தொகுதி, தொகுதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்
தற்போது எழுந்துள்ளது.

இதன் காரணமாக அந்தப் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சிப் பேராசிரியர் ராஜ்
சோமதேவாவின் உதவி நாடப்பட்டுள்ளது.

இதற்கமைய நிலத்தின் கீழ் ஸ்கான் செய்யப்பட்டு அவற்றின் மாதிரிகள்
நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதுடன் இந்தப் பிரதேசத்தின்
பாதுகாப்பை அதிகரிக்கவும் கோரிக்கை விடப்படவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version