Home இலங்கை சமூகம் இலங்கையில் மற்றுமொரு புதிய விமான நிலையம்

இலங்கையில் மற்றுமொரு புதிய விமான நிலையம்

0

இலங்கையில் மற்றுமொரு புதிய விமான நிலையமாக காசல்ரீ நீர்த்தேக்க விமான நிலையத்தின் சோதனை ஓட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் நீர்ப்பரப்பு விமான நிலையமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்திருந்தது.

 பரிசோதனை ஓட்டம்

அதன் பிரகாரம் நேற்றைய தினம் (18) அதற்கான சோதனை பறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறிய ரக விமானங்களைக் கொண்டு நீர்த்தேக்கத்தில் விமானங்களை ஏற்றியும் இறக்கியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பரிசோதனை ஓட்டத்தின் போது சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, அதன் பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version