அரச இலச்சினையுடன் கூடிய அரச வாகனமொன்று கொழும்பு (Colombo) – ஹோமாகம (Homagama) ஆதார வைத்தியசாலை பிணவறைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு அரச வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெலியத்த – புவாக்தண்டாவ, வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு அருகில், அரசாங்கத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியது.
குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் மீட்பு
இந்தநிலையில், தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால், இன்று (11) பிற்பகல் குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டது.
இந்த வாகனத்தை தங்காலை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/another-official-vehicle-was-also-seized-1728654850
