எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் காரணமாக மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.
பேருந்து விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இன்று(12) உயிரிழந்துள்ளார்.
இதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக எல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்து சம்பவம்
தங்காலை மாநகர சபை ஊழியர்கள் குழுவொன்று, தனியார் பேருந்து ஒன்றில் கடந்த 4 ஆம் திகதி நுவரெலியா சுற்றுலா சென்று தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது குறித்த விபத்து ஏற்பட்டிருந்தது.
அதன்போது, பேருந்து சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழந்த நிலையில், அதில் 15 உயிழந்ததுடன் 18 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில், விபத்து காரணமாக மற்றுமொரு பெண் இன்று உயிரிழந்ததையடுத்து, மேலும் காயமடைந்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் பதுளை போதனா மருத்துவமனையின் 11, 12 மற்றும் 10 ஆம் வார்டுகளில் சிகிச்சை பெற்று வருவதாக காவ்லதுறையினர் தெரிவித்துள்ளார்.
