Home இலங்கை சமூகம் ஊழலுக்கு எதிரான பிரஜைகள் என்ற புலனக்குழு : புதிய முயற்சியில் வடமாகாண சமூக ஆர்வலர்கள்

ஊழலுக்கு எதிரான பிரஜைகள் என்ற புலனக்குழு : புதிய முயற்சியில் வடமாகாண சமூக ஆர்வலர்கள்

0

Courtesy: uky(ஊகி)

ஊழலுக்கு எதிரான பிரஜைகள் என்ற புலனக் குழு ஒன்றினூடாக ஊழலுக்கு எதிரான போராட்ட முயற்சி ஒன்று வடமாகாண சமூக ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்டுகின்றது.

வடமாகாணத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை உரிய தரப்பினருக்கும் சுட்டிக் காட்டுவதன் மூலம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கச் செய்வதற்கு இந்தக் குழு முயற்சிக்கின்றது.

உயர்நிலை அதிகாரிகளும் கல்வியலாளர்களும் ஊடகவியலாளர்களும் என பல்லியல்பு கொண்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்துள்ளதாக குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ஊழலுக்கு எதிரான முயற்சிகள் வெற்றியடையும் போது ஆரோக்கியமான ஊழல்களற்ற மாகாணமாக வடமாகாணம் மாற்றம் பெற்று விடும் என்பது சமூக விடய ஆய்வாளரின் கருத்தாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் உயரமான மனிதனின் சோகக் கதை

சமூகவிடய ஆய்வாளர்களின் பார்வையில்..

சமூகம் ஒன்று ஊழல்களால் நிறைந்திருக்கும் போது சிலர் முன்னோக்கிச் செல்ல பலர் வறுமை நோக்கி தள்ளப்படுவார்கள்.

ஊழல்களற்ற தேசமொன்றின் மக்களே ஆரோக்கியமான சமூகமாக வளர்ச்சி பெற்று நிலைத்திருக்க முயற்சிப்பார்.இல்லையேல் அச்சமூகத்தின் இருப்பு விரைவாக கேள்விக்குள்ளாகி விடும் என சமூகவிடய ஆய்வுகளில் கற்றலை மேற்கொள்ளும் வரதன் குறிப்பிட்டிருந்தார்.

ஊழலுக்கு எதிரான பிரஜைகள் புலனக் குழுவின் உருவாக்கமும் அதன் முயற்சியும் பற்றிய அவருடனான உரையாடலின் போது அவர் தொடர்ந்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டு தனிமனித உரிமைகளை மீறாது நாட்டில் தற்போதுள்ள நடைமுறைச் சட்டங்களை பின்பற்றி இந்த புலனக் குழு தன் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றஞ்சாட்டலும் அதற்கெதிரான போராட்டங்களும் உண்மைத் தன்மையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.கடமைகளை செய்யும்போது அவர்களுக்கு இடையூறுகள் நிகழாத வகையிலும் செயற்பட வேண்டும்.
இந்த விடயங்களை குழுவின் நெறியாளர்கள் கருத்தில் எடுப்பதை அவதானிக்கலாம்.

சான்றுப் பூர்வமான ஆதாரங்களை பெற்று அதன் பின்னர் பதிவிட வேண்டும்.உண்மைத் தகவல்களை அறிந்து கொள்ள தகவலறியும் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளல், மற்றும் குற்றச் சாட்டுக்களுக்கான ஆதாரங்களை பெற்றுக் கொள்ளல் போன்ற விடயங்களில் அவர்கள் கவனமெடுத்து உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்படுவது பாராட்டக் கூடியதாகவுள்ளது.

பல்திறனுள்ள மனிதர்களை உறுப்பினர்களாக கொண்டிருப்பதோடு நடவடிக்கைகளை விவாதிக்கும் அவர்களது இயல்பு நிலையும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவல்லன என அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்.சுன்னாகத்தில் 19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு

பதிவிடுவோருக்கான அறிவுறுத்தல்கள் 

ஊழலுக்கு எதிரான பிரஜைகள் குழுவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் எப்படிச் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எத்தகைய ஈடுபாடுகள் கொண்டவர்கள் இந்த குழுவில் இணௌந்து கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஊழலுக்கு எதிரான பிரஜைகள்” எனும் குழு உருவாக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளது.

நீங்களும் ஊழல், மோசடி, துஸ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுக்க விரும்புபவராயின் https://chat.whatsapp.com/De3uU5UO4tkFNDxu6VZ1j1 இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.

1.உங்கள் கண்களில் சிக்கும் தகவல்களை இக்குழுவில் பரிமாறுவதன் ஊடாக இயலுமானவரை கட்டுப்படுத்த முடியும்.

2. இரகசியம் பேணப்படும். அத்துடன் உங்கள் தகவல் நம்பகதன்மையானது என்பதை உறுதிப்படுத்தி பகிர்ந்து கொள்ளுங்கள்.

3 . நம்பகதன்மையற்ற எந்தவொரு தகவல் பரிமாற்றத்துக்கும் அட்மின் பொறுப்பேற்காது.

4. எமது இலக்கு, வடக்கு மாகாணத்தில் ஊழல், மோசடியற்ற கலாச்சாரத்துக்கு ஊக்கப்படுத்துவதேயன்றி, பழிவாங்குதல் அல்ல.

5. வடக்கில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இணைந்துள்ளவர்களில் தைரியமாக முன்னெடுத்து செல்ல ஆர்வம் உள்ளவருக்கு அட்மின் வழங்கப்படும்.

6. இக்குழுவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாதுகாப்பு தரப்பினர், புலனாய்வாளர்கள் என பன்முகப்படுத்தப்பட்டவர்கள் இணைக்கப்பட்டிருப்பர்.

7. எந்தவொரு தகவலையும் நேரடியாகவோ அல்லது அட்மின் ஊடாகவோ பரிமாற முடியும்.

8. எந்த சந்தர்ப்பத்திலும் அட்மினாக இருப்பவர் அரசியலில் ஈடுபட முடியாது.

9. அரசியல் குறுகிய நோக்கத்திற்காக அல்லது வேறு ஏதும் தவறான நோக்கத்திற்காக இக்குழு பயன்படுத்தப்பட்டால் குறித்த நபர் அட்மினால் குழுவிலிருந்து நீக்கப்படுவார்.

எதிர்காலத்திற்காக இன்றே ஆரம்பியுங்கள்.என அவ் அறிவுறுத்தல்களில் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல்களை எப்படிச் சேகரிக்க வேண்டும் என்பதற்கு சில எடுத்துக்காட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ள.

1. அலுவலக நேரத்தில் சந்தை உள்ளிட்ட தனிப்பட்ட இடங்களில் அரச சேவையாளர்கள் தென்பட்டால் ஒரு புகைப்படத்துடன் அனுப்பி வையுங்கள்.

2. ஐயம் இருப்பின் தனிப்பட தகவலை முழுமையான விபரத்துடன் பரிமாற முடியும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

வெற்றிக் கட்சியாக சு.கவை மாற்றுவேன்! – சந்திரிகா அம்மையார் சூளுரை

புலனக் குழுவின் உறுப்பினர்கள் 

வடமாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களின் உயர் நிலை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல் துறை சார்ந்தோர் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த புலத்தில் வடமாகாணத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்காக நெறியாளர்கள் இன்னும் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்காக பாடசாலை மாணவர்களிடையேயும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடுகளை முன்னெடுக்கும் போது தான் இந்த புலனக்குழுவினரின் முயற்சி முழுமையடையும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

புலம்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்களும் ஊழலுக்கு எதிரான பிரஜைகள் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

காலி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version