Home இலங்கை சமூகம் வடமராட்சியில் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

வடமராட்சியில் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

0

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய (14) தினம் தேசத்தின் குரல் என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கம்
அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் ஜனநாயக தமிழ்
தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலைமையில் ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி

இதன்பின்னர் சிறிது நேர மௌன அஞ்சலியை தொடர்ந்து ஜனநாயக போராளிகள் கட்சியின் நகர
சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களால் மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலிகள்
செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜனநாயக போராளிகள் கட்சியின்
முக்கியஸ்தர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களால் மலர்
அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version