இந்தியாவில் நடைபெறும் 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்தினை ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப் போட்டி
உலக அளவில் நடத்தப்படும் 72ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (31) இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்றைய இறுதிப் போட்டியில் களமிறங்கும் அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நமது நாட்டையும், மக்களையும் சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அவர் ஏற்கனவே நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
