தங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மொனராகலையில் ‘அநுர கோ கம’ ஆரம்பிக்கப்படும் என அப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
செவனகல பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்பு அறுவடைக்கு பணம் செலுத்தாததற்கும், நிலுவைத் தொகையை செலுத்தாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்றை நேற்று(26) நடத்தியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில், செவனகல சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டிருந்தனர்.
மொனராகலையில் ‘அநுர கோ கம’
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது, ஒரு உக்டனுக்கு 15000 ரூபாய் வழங்க வேண்டும் என கூறியிருந்தது.
எனினும், தற்போது, அந்த தொகையை 10,000 ரூபாவாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், மொனராகலையில் ‘அநுர கோ கம’ ஆரம்பிக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
