Home இலங்கை அரசியல் சுவிட்சர்லாந்தில் உள்ள முக்கிய CID அதிகாரி தொடர்பில் அநுர அரசின் நிலைப்பாடு என்ன..!

சுவிட்சர்லாந்தில் உள்ள முக்கிய CID அதிகாரி தொடர்பில் அநுர அரசின் நிலைப்பாடு என்ன..!

0

கொழும்பு பகுதியில் இடம்பெற்ற மாணவர் அடங்கலான 11பேர் கடத்தப்பட்ட விவகாரத்தினை விசாரித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே காலப்பகுதியில் குற்றப்புலனாய்வு அதிகாரியான நிஷாந்தடி சில்வா நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்தார். 

இந்நிலையில், ஆட்சியில் உள்ள அநுர அரசாங்கம் இவ்வாறான அதிகாரிகளை அழைத்து வருமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் சர்வதேச விசாரணைகளை நேரடியாகவே நிராகரித்து வருகின்றனர். 

ஆகவே, இவை அனைத்தையும் வைத்து நோக்கும் போது நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடாத்த தயாரா என மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்…

NO COMMENTS

Exit mobile version