யாழ்.செம்மணி விவகாரம் தொடர்பில் அநுர அரசாங்கத்தில் தீர்வு கிடைக்காது என தமிழரசுக்கட்சியின் பிரதித் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த புதைபுழி விவகாரம் அரசாங்கத்தின் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.ஆகவே அந்த அரசாங்கமே இதனை விசாரிப்பது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழியிலே இதுவரை 65 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படலாம்.
இனிமேலாவது அரசாங்கம் இந்த விடயத்தை உண்மை என ஏற்றுக் கொள்ள வேண்டும்.அத்தோடு, அடாத்தாக கதைப்பதனை நிறுத்தி விட்டு இந்த ஆய்வுக்கான வெளிநாட்டு நிபுணர்களுக்கான நிதியினை வழங்கி முழுமையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே, ஜனாதிபதி இந்த ஆய்வுக்குரிய தொடர் நடவடிக்கைக்கான நிதியினையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினையும் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுப்பதாக சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
