யாழில் (Jaffna) காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக
சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்பட்ட
சம்பவமொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இன்று (17.04.2025) விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலி வடக்கு காணிகள்
விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில்
ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி காவல் நிலைய
பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறையினர் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன்
தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
கூட்டம் கூட முடியாது
இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக
சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில்
ஈடுபட்டார்.
தாம் எமது காணிகள் விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பை நடாத்தவே தாம்
வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் தேசிய அடையாள அட்டையை
வாங்கி பெயர்களை பதிவு செய்த காவல்துறையினர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்தவர்களை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில்
செயல்பட்டனர்.
அச்சுறுத்துத்திய காவல்துறை
இவற்றை காணொளியை எடுத்த ஊடகவியலாளர்களையும் காவல்துறையினர் மற்றும் காவல்துறை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்தனர்.
ஊடகவியலாளர் சந்திப்பை முடித்து விரைவாக செல்லுமாறு அங்கு வந்திருந்தவர்களுடன்
காவல்துறையினர் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகை தரும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கவில்லை எனில் NPP க்கு யாரும் வாக்களிக்க கூடாது என வடமாகாண காணி உரிமைகளான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பல நூறு ஏக்கர் காணிகள் யாழில் விடுவிக்கப்படவில்லை என்றும், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய அரசு எதையும் செய்யவில்லை.
வடமராட்சி மக்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மறந்தேனும் NPPக்கு வாக்களிக்க கூடாது என்றும் அவ்வாறு வாக்களித்தால் காணிகள் அபகரிக்கப்படுவது மட்டுமின்றி விகாரைகளும் அமையலாம் என்றும் தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/Xu5Jgo0Lxm4
