Home இலங்கை அரசியல் மதவாச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் குறித்து வெளியான தகவல்

மதவாச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் குறித்து வெளியான தகவல்

0

மதவாச்சி பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது,

எனினும் பிரதி தவிசாளர் பதவியை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ளது.

மதவாச்சி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி
முன்னணி கட்சியாக வெற்றி பெற்றது. எனினும், அது முழுமையான பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.

இரகசிய வாக்கெடுப்பு

இந்த நிலையில், எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாததால், நேற்று
இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போதே, தேசிய மக்கள் சக்தியின் தனபால விமலதுங்க, தவிசாளராகவும், பொதுஜன
முன்னணியைச் சேர்ந்த ரங்கன சோமதாச பிரதி தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

NO COMMENTS

Exit mobile version