Home இலங்கை சமூகம் லயன் குடியிருப்பில் தீ பரவல்: 3 வீடுகள் முற்றாக சேதம் -இருவர் பலி

லயன் குடியிருப்பில் தீ பரவல்: 3 வீடுகள் முற்றாக சேதம் -இருவர் பலி

0

எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த இந்த தீ விபத்து இன்று (03) அதிகாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருவர் பலி

இந்த தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த 60 வயதுடைய ஆணும் 50 வயதுடைய பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த தீ விபத்தில் 03 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/apartment-fire-two-dead-in-sri-lanka-1719971282

NO COMMENTS

Exit mobile version