Home இலங்கை கல்வி ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரல்

ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரல்

0

இந்த ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் இன்று (16) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையதளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

நேரடியாக அமைச்சிற்கு கையளிக்கும் விண்ணப்பங்கள்

இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று, ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நேரடியாக அமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/application-for-annual-transfer-for-teachers-1784198944

NO COMMENTS

Exit mobile version