Home இலங்கை சமூகம் தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகைமையுள்ள விண்ணப்பதாரிகள் தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு 

அதேநேரம், தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எந்த சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையவிருந்த நிலையிலேயே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version