Home இலங்கை சமூகம் கிழக்கு மாகாணத்தில் பல ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் பல ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

0

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு
ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்தநிகழ்வானது இன்று (04) திருகோணமலை ஆளுநர்
அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர
தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் சேவை

இதன்போது,  2014 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர் சேவையில் நியமிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.
அருள்ராஜ், கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன், மாகாண அரச சேவை
ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version