Home இலங்கை சமூகம் ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

0

பாப்பரசர் பிரான்சிஸின் (Pope Francis) மறைவையொட்டி அவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் தினமான ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸின்(Pope Francis) மறைவு உலகளாவிய ரீதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின் மதத் தலைவர் மட்டும் அல்ல அவர் ஒரு மிக முக்கியமான உலக அளவிலான மனித உரிமை, சமாதான தூதராகவும் பார்க்கப்படுகிறார்.

தேசிய துக்க தினம்

ஜோர்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், 2013-ஆம் ஆண்டு, போப் பெனடிக்ட் பதவியில் இருந்து விலகிய பிறகு அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர்.

உலகளவில் அறியப்பட்ட பரிசுத்த பாப்பரசர் 88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு நேற்று முன்தினம் 21 உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உலக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இலங்கையில் ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி சகல அரச நிறுவனங்களும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

you may like this


https://www.youtube.com/embed/qSaUUhRGgCE

NO COMMENTS

Exit mobile version