Home முக்கியச் செய்திகள் அர்ச்சுனாவின் எம்.பி பதவி: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அர்ச்சுனாவின் எம்.பி பதவி: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனாவின் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(26) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி, புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அர்ச்சுனாவின் பதவிக்கு எதிரான மனுவின் விசாரணை  ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

செம்மணியில் வெளியிட்ட அறிவிப்பு 

இவ்வாறானதொரு பின்னணியில், யாழ். செம்மணியில் நேற்று இடம்பெற்ற அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விரைவில் விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்போது, சில தமிழ் அரசியல்வாதிகளின் இழிவான செயற்பாடுகளால் தான் ஒரு அரசியல்வாதியாக இருப்பதை நினைத்து வெட்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

You may like this

https://www.youtube.com/embed/61NpKQfGKHMhttps://www.youtube.com/embed/B-3WPUMZXhk

NO COMMENTS

Exit mobile version