Home இலங்கை அரசியல் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படவுள்ள அர்ச்சுனாவின் உரையின் பகுதிகள்

ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படவுள்ள அர்ச்சுனாவின் உரையின் பகுதிகள்

0

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் (Ramanathan Archchuna) உரைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதால் எந்தவித பயனுமில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அர்ச்சுனா எம்.பி பிரபல யூடியூபர் என்றும், அவர் உரையாற்றிய சம நேரத்திலேயே அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (05) அர்ச்சுனா கூறிய தகாத வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்திருந்த நிலையிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் சபாநாயகரைப் பார்த்து இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது. இங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/P8l0xGzWhrk

NO COMMENTS

Exit mobile version