Home இலங்கை சமூகம் தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த அர்ச்சுனா

தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த அர்ச்சுனா

0

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், அங்கு நிலவி வந்த நிர்வாக சீர்கேடுகளையும், குறைபாடுகளைம் அடையாளம் கண்டு அவற்றை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து வைத்தியர்  அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்ததுடன், வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்களால் ஏமாற்றமடைந்த மக்கள் கொதிந்தெழுந்த நிலையில் பெரும் ஆர்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த ராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறிய நிலையில்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர கோபாலமூர்த்தி ரஜீவ் கடமைகளை பொறுப்பேற்றார்.

இவ்வாறான பின்னணில் தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பில் எழுந்த சர்ச்சையில் உண்மையில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version