Home இலங்கை அரசியல் டீலுக்குள் தேசிய தலைவரையும் இனப்படுகொலையையும் புதைத்த சாணக்கியன்: அர்ச்சுனா சாட்டையடி

டீலுக்குள் தேசிய தலைவரையும் இனப்படுகொலையையும் புதைத்த சாணக்கியன்: அர்ச்சுனா சாட்டையடி

0

நாடாளுமன்றத்தில் ஒரு முகத்துடனும் வெளியில் ஒரு முகத்துடனும் நடமாடும் தேசத்துரோகி சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்திற்குள் டீல்களை அமைத்து விட்டு வெளியில் வந்து தேசிய தலைவர் பிரபாகரனின் பெயரை சொல்லி மக்களை இவர்கள் ஏமாற்றுகின்றார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரிடம் நாட்டில் இனப்படுகொலை என்ற ஒன்று நடைபெறவில்லை என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவிக்க அதற்கு சாணக்கியன் வாய்திறக்கவில்லை.

நான் எழுந்து குரல் கொடுத்த போதும் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை, தமிழ் மக்களை இத்தனை வருடம் இவர்கள் இவ்வாறுதான் ஏமாற்றி கொண்டிருக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனப்படுகொலை தொடர்பில் சர்வதேசத்திடம் கலந்துரையாடப்பட்ட விடயம், செம்மணி விவகாரம், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயங்களை அவர் தெளிவுப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/IBQHLv8jhQw

NO COMMENTS

Exit mobile version