நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Archchuna Ramanathan) தையிட்டி மக்களுடைய போராட்டத்தை தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக பாவிக்கின்றார் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி பதினெட்டு பேருக்கு சொந்தமான காணி
அந்தக் காணிக்கு உரித்தானவர்கள் வடபகுதியில் தற்போதும் இருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம், வுனியா, கொழும்பு உட்பட தையிட்டி காணிக்கு சொந்தமான 18 பேர்
இலங்கையில் உறுதியோடு இருக்கிறார்கள்.
தையிட்டி போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அதில் எல்லோராலும்
எல்லா நேரத்திலும் பங்கு பெற்ற முடியாது.
காணி விடுவிக்கப்படவில்லை
குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில்
பங்குபற்றி வருகிறார்கள். தையிட்டி காணி மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்
என்பதில் காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு உறுதியாக இருக்கிறது.
தையிட்டி காணிக்குரிய மக்களை நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு
கொழும்புக்கு அழைத்துச் சென்று காணிக்கான பௌத்த சாசன அமைச்சரை சந்தித்து பேசி
மக்கள் தங்களுடைய விடயங்களை எடுத்துக் கூறி மக்களுடைய காணி மக்களுக்கு
விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சரும் ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதற்குப் பிற்பாடு இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை. அதிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டு காவல்துறையினர் தற்போது இருக்கிறார்கள். தங்களுடைய காணியை
மீட்பதற்காக போராட்டம் நடத்தும் மக்களை காவல்துறையினர் விரட்டுகிறார்கள்.
அதற்குப் பிற்பாடு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தையிட்டி
அமைந்திருக்கின்ற காணிக்கு சொந்தமான குறிப்பிட்ட நான்கு பேரை விகாரைக்குள்
அழைத்துச் சென்று அந்த விகாராதிபதியை சந்தித்தபின் காணி பெற்றுக் கொடுப்பதாக
கூறியுள்ளார்.
விகாராதிபதியை சந்தித்த அர்ச்சுனா
நான் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கும், கௌசல்யாவிற்கும்
ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறேன். காணிக்கான நான்கு நபர்களை நீங்கள் அழைத்துச் சென்றதை நான் வரவேற்கிறேன். ஆனால்
காணிக்கான உரிமையாளர்கள் இன்னும் 14 பேர் வெளியில் இருக்கிறார்கள்.
வெளியில் இருக்கும் அந்த 14 பேருக்கும் காரணிக்கான உறுதி இருக்கின்றது
ஏன் அவர்களை நீங்கள் விட்டுவிட்டு நான்கு பேரை மட்டும் அழைத்துச் சென்று
விகாராதிபதியை சந்தித்தீர்கள்? காரணம் என்ன? தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அர்ச்சுனா இராமநாதன் தன்னுடைய அரசியல்
இலாபத்திற்காக பாவிக்கின்றார்.
அரசாங்கத்தினதும் காவல்துறையினரினதும் அராஜகத்திற்கு எதிராக காணிக்கான மக்கள் உரிமை
அமைப்பு வெகு விரைவில் மிகப்பெரிய போராட்டங்களை செய்ய வேண்டிய தேவைக்குள்
தள்ளப்படும்“ என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
https://www.youtube.com/embed/i76yZiXci6s
