Home இலங்கை அரசியல் அநுர அரசின் ஆயுள்காலம் – ஆருடம் தெரிவித்த தேரர் – சபையில் வெளியிட்ட அர்ச்சுனா

அநுர அரசின் ஆயுள்காலம் – ஆருடம் தெரிவித்த தேரர் – சபையில் வெளியிட்ட அர்ச்சுனா

0

சமகால அநுர அரசாங்கம் இன்னும் சிறது காலம்தான் ஆட்சியில் இருக்கும் என தலதா மாளிகையின் மகாநாயக்க தேரர்கள் தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான
விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

மகாநாயக்க தேரர்கள் சொன்ன கருத்து

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடம் கலந்துரையாடிய சந்தர்ப்பத்திலேயே இதனைத் தெரிவித்தாக அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.  .

இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இந்த அரசாங்கம் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தேன். அப்போது அவர் என் கையை பிடித்து முறுக்கி தம்பி, உங்களுக்கு என்ன பிரச்சினை ஏன் நாடாளுமன்றத்தில் உரக்க பேசுகிறீர்கள் என்று கேட்டார்.

எனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை. நாட்டிலுள்ள ஏழை மக்களுக்காகவே பேசுகிறேன். கிராமங்களில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று சென்று பாருங்கள். போகும் போது பாதுகாப்புக்காக ஹெல்மட் அணிந்து தான் செல்ல வேண்டும்  என குறிப்பிட்டேன்.

ஆனால் நான் எவ்வித பாதுகாப்பும் இல்லாம் தான் செல்கிறேன். நான் ஒரு தமிழன் ஆனால் என்னை எந்த சிங்களவரும் கொல்ல மாட்டார்கள். இது உங்களின் நாடு தானே போய் மக்களை நேரில் சந்தித்துப் பாருங்கள் என ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version