Home இலங்கை அரசியல் அமைச்சரின் பாதணி என் காரில்! நாடாளுமன்றில் கிண்டலடித்த அர்ச்சுனா

அமைச்சரின் பாதணி என் காரில்! நாடாளுமன்றில் கிண்டலடித்த அர்ச்சுனா

0

செம்மணி மனித புதைகுழிக்கு எதிரான நீதி கோரல் போராட்டத்தின் போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று நாடாளுமன்றில் எதிர்தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் இந்த விடயம் நகைச்சுவையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது “முன்னதாக இந்த உயரிய சபையில் வைத்து தன்னை தமிழ் மக்கள் விரட்டியடிப்பார்கள் என கூறிய அமைச்சர், அதே தமிழ் மக்களால் இன்று விரட்டியடிக்ப்பட்டுள்ளார் என்பதை நினைவில்கொள்ளலேண்டும்.” என அர்ச்சுனா கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறு செம்மணியில் விரட்டியடிக்கப்ட்ட அமைச்சரின் பாதணிகள் எனது காரில் உள்ளன எனவும், அதனை வந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அர்ச்சுனா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் செம்மணிக்க விஜயம் செய்தபோது மக்களுடன் உரையாடுவதை தடுக்கவும் அவரை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றவும் அரசாங்க தரப்புக்களால் கார் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்ததாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு  மேலும் கருத்து தெரிவித்த அவர், 

NO COMMENTS

Exit mobile version