Home இலங்கை சமூகம் இளங்குமரன் – இராமநாதன் இடையே கடுமையான வாய்தர்க்கம் : வைரலாகும் காணொளி

இளங்குமரன் – இராமநாதன் இடையே கடுமையான வாய்தர்க்கம் : வைரலாகும் காணொளி

0

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் (K.Ilankumaran) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் (Angajan) தந்தையாரான இராமநாதனுடன் (Ramanthan) காணிப் பிணக்கு தொடர்பில் சில நாட்களுக்கு முன்னர் முரண்பட்டுக் கொள்ளும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில்  வெளியாகியுள்ளது.

இந்தக் காணொளியில் இளங்குமரன் தெரிவித்ததாவது, உங்களுடைய அரசியல் பலத்தை இங்கே காட்ட வேண்டும். மக்களுக்காக தான் அரசியல் உள்ளது.

இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணிகளை சுவீகரித்துக் கொள்கின்றீர்கள். இங்கு ஊழலும் இலஞ்சமும் தான் மலிந்து போயுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படும் நிலையில் இந்த விடயம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ள ஆதன உரித்து விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற அவதூறு பரப்புரைகளை  மேற்கொள்வதாக குறிப்பிட்டு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.youtube.com/embed/SKmkCdWiXjo

NO COMMENTS

Exit mobile version