இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கும் இடையே ஒரு சுமூகமான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (20) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு விடயங்களில் இராணுவத்தின்
ஈடுபாடு மற்றும் பொதுமக்களுடனான அதன் ஒத்துழைப்பு குறித்து
கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புர மற்றும் 22 வது
காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் பெரேரா ஆகியோரும்
இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
