Home இலங்கை சமூகம் போக்குற்றவாளிகளான படை அதிகாரிகள் வோல்கர் டர்க்கை சந்திக்க எடுத்த முயற்சி படுதோல்வி

போக்குற்றவாளிகளான படை அதிகாரிகள் வோல்கர் டர்க்கை சந்திக்க எடுத்த முயற்சி படுதோல்வி

0

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம் சாட்டப்படும் படை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 வெளிவிவகார அமைச்சின் ஊடாகஇந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சந்திக்க முயன்ற படை அதிகாரிகள் 

கடற்படையின் முன்னாள் பேச்சாளரும், கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுக்குள்ளானவருமான ரியர் அட்மிரல் டி.பி.கே.தசநாயக்க, இறுதிப்போரில் 57 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவரும் போர்க்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளவருமான மேஜர் ஜெனரல் ஜி.வி.ரவிப்பிரிய ஆகியோரே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்திக்க முயன்றிருந்தனர்.

எனினும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் கொடுக்கப்படாததால், இவர்களின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version