Home இலங்கை சமூகம் அஸ்வெசும உதவித்தொகையை இலகுவாக பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள்

அஸ்வெசும உதவித்தொகையை இலகுவாக பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள்

0

அஸ்வெசும உதவித்தொகையை இலகுவாக பெற்றுக் கொள்ள கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்மைப்பு பிரதி அமைச்சர்
சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டலுடன் அஸ்வெசும நலத்திட்டங்கள் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட அஸ்வெசும நலத்திட்டங்களை
பயனாளிகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

தற்காலிக அடையாள அட்டை

அடையாள அட்டை இன்றி வங்கியில் முடக்கப்பட்ட பணத்தினை பெற்றுக் கொள்வதில் குறிப்பாக மலையக மக்கள் பல்வேறு தடங்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கொடுப்பனவுகளை வங்கியில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக பிரதேச கிராம உத்தியோகஸ்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை பெற்று கொள்வதன் மூலம் தடையின்றி பெற்று கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version