Home இலங்கை சமூகம் ரீச்சாவில் நடைபெறவுள்ள மாற்றுமோதிரம் நிகழ்வு

ரீச்சாவில் நடைபெறவுள்ள மாற்றுமோதிரம் நிகழ்வு

0

அருந்ததியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுமோதிரம் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி பி.ப 4 மணிக்கு ரீச்சாவில் நடைபெறவுள்ளதாக அருந்ததியின்
இயக்குனர் கிருஷ்ணராஜ் மேகலா தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதில் ஏராளமான அழகுக்கலை நிபுணர்களின் ஆற்றுகைகள் இடம்பெறவுள்ளன. கண்காட்சிகள்
இடம்பெறவுள்ளன.

நிகழ்வு ஏற்பாடு

வித்தியாசமான ஒளியமைப்பு, அலங்கரிப்பு போன்ற
ஒழுங்கமைப்புகளுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் பங்குபற்றுனருக்கு இருவழி போக்குவரத்து வசதிகள்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் குடும்பத்துடன் வந்து இந்த நிகழ்வில்
கலந்துகொள்ளலாம். ஏற்கனவே நடைபெற்றதை விட இது வித்தியாசமாக இருக்கும் என அவர்
மேலும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version