யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் நேற்றிரவு கசிப்பு
உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 26 வயது இளைஞன், 1
இலட்சத்து 80,000 மில்லிலீட்டர் கோடாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பு உற்பத்தி
குறித்த
நபர் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
