Home இலங்கை சமூகம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை: நூற்றுக்கணக்கானோர் சிக்கினர்

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை: நூற்றுக்கணக்கானோர் சிக்கினர்

0

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். 

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றைய தினம் (24) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானவர்கள்

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் 17 பேரும், சந்தேகத்தின் பேரில் 580 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 267 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 176 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 23 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 21 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3635 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

NO COMMENTS

Exit mobile version