முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று(30) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,கூட்டு சேர்ந்தவர்கள் எல்லாம் படிப்படியாக சிறை செல்லப்போவது
அவர்களுக்கு தெரியும்.
கைது
பாதாள உலக குழுக்களை இயக்கியவர்கள் இவர்கள் இன்று
வெளிநாடுகளில் தங்கியிருந்த நிலையிலும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுப்பிரிவு மற்றும் பொலிஸ் பிரிவை சுயாதீனமாக இயங்க
விட்டிருக்கின்றோம். கடந்த காலம் என்றால் அரசில் அழுத்தம் காரணமாக இவ்வாறு
செய்ய மாட்டார்கள்.
இவர்களின் கைதுக்கு பின்பு பல அரசியல்வாதிகளின் பெயர்கள்
தெரியவரவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவு கடந்த
நம்பிக்கையுள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும் போது இந்த கூட்டங்கள் இல்லாமல்
போய்விடும் எனத் தெரிவித்தார்.
