Home இலங்கை சமூகம் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

0

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 3ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டுள்ளார்.

இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் வடக்கு கடற்பரப்பில்
வைத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வர 8 கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் கடற்படையினர் கைது
செய்தனர்.

விளக்கமறியலில் வைக்க

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார்
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதவான் முன் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version