Home இலங்கை அரசியல் கைதுகள் இனியும் தொடரும்..! உறுதியாக கூறும் ஆளும் தரப்பு

கைதுகள் இனியும் தொடரும்..! உறுதியாக கூறும் ஆளும் தரப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்று மேலும் பலரும் கைது செய்யப்படுவர் என துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் முன் ரணில் விக்ரமசிங்கவும் ஏனையவர்களை போல ஒரு நபர் மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இன்னும் பலர் இந்த விதியை எதிர்கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார்.

ராஜித சேனாரத்ன 

ரணில் விக்ரமசிங்கவுக்கே இந்த நிலை என்றால் நமக்கு என்ன நடக்கும் என இப்போதே பலர் சிந்தித்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இதே சிந்தனையுடன் இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version