Home இலங்கை சமூகம் பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

0

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித்
திட்டம் தனியார் துறையின் பங்களிப்புடன் இன்று(12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கமரா
அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட தூர பேருந்துகளில் 

இந்த முயற்சியின் கீழ், ஓட்டுநர் நடத்தையைக் கண்காணிக்கவும், தேவைப்படும்போது
எச்சரிக்கைகளை வழங்கவும் 40 AI கமராக்கள் பேருந்துகளில் நிறுவப்படவுள்ளன.

இந்த அமைப்பு மூலம் ஓட்டுநர் சோர்வு, மயக்கம் அல்லது கண் மூடல் போன்ற
அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.

அத்துடன் போக்குவரத்து விதிகள் மற்றும் ஆசனப்பட்டி பயன்பாடு ஆகியவற்றின்
இணக்கத்தைக் கண்காணிக்க முடியும்.

இது ஓட்டுநர்களுக்கு சமிக்ஞைகளை வழங்கும் மற்றும் பேருந்தை கட்டுப்படுத்தவும்
உதவும்.

இந்த திட்டத்தின் முதல் கட்டம் கதிர்காமம் பேருந்து சாலையில் போக்குவரத்து,
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது பல நீண்ட தூர பேருந்துகளில் AI கமராக்கள் பொருத்தப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version