Home இலங்கை சமூகம் அறுகம் குடா விவகாரம் : பின்புலத்தை அமெரிக்காவிற்கு அறிவித்த அரசாங்கம்

அறுகம் குடா விவகாரம் : பின்புலத்தை அமெரிக்காவிற்கு அறிவித்த அரசாங்கம்

0

அறுகம் குடாவில் (Arugam Bay) தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டமையின் பின்னணியில் தீவிரவாதம் இல்லை என இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிற்கு (United States) அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை (30.10.2024) அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்தித்த வேளை அரசாங்க அதிகாரிகள் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.

அறுகம் குடா தாக்குதல்

இந்த சந்திப்பில் அறுகம் குடா தாக்குதல் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டமை உட்பட பல விடயங்கள் குறித்து அரசாங்க அதிகாரிகள் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், விசாரணைகளின் போது தெரியவந்துள்ள விடயங்கள் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ள அரசாங்க அதிகாரிகள் தனிநபர் குழுவொன்றே இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும் இதன் பின்னணியில் எந்தவித தீவிரவாதமும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க விடுத்த பயண எச்சரிக்கை

மேலும், அறுகம் குடா தொடர்பில் அமெரிக்கா விடுத்த பயண எச்சரிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ள இலங்கை அரசாங்க தரப்பினர், இந்த சதித்திட்டமிடலின் பின்னணியில் தீவிரவாதம் இல்லை என்பதால் இந்த பயண எச்சரிக்கை அவசியமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறாததால் பயண எச்சரிக்கையை நீக்கவேண்டும் என இலங்கை அதிகாரிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version