மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக
சேவையின் விசேட தர அலுவலர் ஜே.எஸ். அருள்ராஜ் ஜனாதிபதியால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமையேற்பு
இவர் எதிர்வரும் 27ஆம் திகதி தமது கடமையை உத்தியோகபூர்வமாக ஏற்கவுள்ளார்.
தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளராகக் கடமை புரிந்து வரும்
இவர் அதற்கு முன்னர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபராகக் கடமையாற்றி
இருந்தார்.
