தியாக தீபம் திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்.
நல்லூரில் நடைபெற்றது.
திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில்
இன்று இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் இன்று
காலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
