Home இலங்கை குற்றம் தப்பி ஓடிய அசாத் மௌலானாவை பின் தொடர்ந்த பிள்ளையான் – சுரேஸ் சாலே! வெளியான திடுக்கிடும்...

தப்பி ஓடிய அசாத் மௌலானாவை பின் தொடர்ந்த பிள்ளையான் – சுரேஸ் சாலே! வெளியான திடுக்கிடும் தகவல்

0

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா இந்தியாவிற்கு தப்பி ஓடிய போதும் அவரை பிள்ளையான் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அத்துடன், புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஸ் சாலேவும் அசாத் மௌலானாவை பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டிருந்தமை தொடர்பில் அசாத் மௌலானா கூறிய காணொளி ஒன்று கடந்த காலங்களில் வெளியாகியிருந்தது.

குறித்த காணொளியில் இதற்கு நேரடி சாட்சியம் நான் தான் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இந்த காணொளி முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version