அஸ்வெசும கொடுப்பனவை மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அஸ்வெசும கொடுப்பனவு, அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றம் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தகுதியான நபர்கள்
இதற்கான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அமைச்சர் உபாலி பன்னிலகே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 420,000 குடும்பங்களின் அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, தற்போது நாடளாவிய ரீதியில் 138,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
