Home இலங்கை சமூகம் அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

0

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது.

இந்தப் பட்டியல் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.wbb.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள்

அத்துடன், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும், கிராம உத்தியோகத்தர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளின் காரியாலய அறிவிப்பு பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தகவல் சேகரிப்பின் இரண்டாம் கட்டத்தின் போது வழங்கப்பட்ட தகவல்களில் பிழை அல்லது முரண்பாடு இருப்பதாக கருதும் விண்ணப்பதாரர்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற தகுதியான பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாத நபர்கள் ஆகியோர் இதற்கான மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டாளர்கள்/ ஆட்சேபனையாளர்கள் www.wbb.gov.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு பிரவேசித்து, பின்னர் தங்களது மேல்முறையீடுகள்/ ஆட்சேபனைகளை இணையவழியாகவும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version