Home விளையாட்டு பத்து வருடங்களுக்கு பின்னர் சென்னை அணிக்கு திரும்பிய தமிழக வீரர்

பத்து வருடங்களுக்கு பின்னர் சென்னை அணிக்கு திரும்பிய தமிழக வீரர்

0

  சென்னை அணி(chennai super kings) ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அஸ்வின்(ashwin) தாய்வீடு திரும்பியுள்ளார். அவரை சி எஸ் கே அணி 9.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

நேற்று(24) சவுதி அரேபியாவின்(saudi arabia) ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தின் போதே அஸ்வின் சென்னை அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய சென்னை அணி

இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அஸ்வின் “வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்கள். நான் சென்னை அணிக்காக 2008 முதல் 2015 வரை விளையாடியதுதான் எனது சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியது.

2011 ஆம் ஆண்டு ஏலத்தில் என்னை எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் போட்டி போட்டது போல, இப்போதும் செயல்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மீண்டும் சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி

10 வருடங்களுக்குப் பிறகு சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. தோனி மற்றும் ருத்துராஜ் ஆகியோருடன் விளையாடக் காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட்(Rishabh Pant.). அதே போல ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரராக இருந்த டேவிட் வோர்னர்(david warner) எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.

NO COMMENTS

Exit mobile version