Home விளையாட்டு அதிரடியாக ஆடிய பெத்தும் நிஸ்ஸங்க – சுப்பர் ஓவரில் போராடிய இலங்கை

அதிரடியாக ஆடிய பெத்தும் நிஸ்ஸங்க – சுப்பர் ஓவரில் போராடிய இலங்கை

0

புதிய இணைப்பு

ஆசியக் கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சுப்​பர் 4 சுற்​றின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியுள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய (India) மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை 202 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமனிலையில் முடிவடைந்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க 107 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 2 ஓட்டங்களைப் பெற்றது.

3 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சுப்பர் ஓவரில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முதலாம் இணைப்பு

ஆசியக் கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி போட்டியில் இரவு இந்தியா – இலங்கை (Sri Lanka) அணி​கள் டுபா​யில் மோதுகின்​றன.

ஆசியக் கிண்ண T20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

8 அணிகள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடர் இறுதிக்​கட்​டத்தை நெருங்கி உள்​ளது.

இறு​திப் போட்​டிக்கு தகுதி 

சூப்​பர் 4 சுற்றில் முதல் இரு போட்டிகளி​லும் வெற்றி பெற்ற சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்று விட்​டது.

இந்​நிலை​யில் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இந்​திய அணி இன்று இலங்​கை​யுடன் மோதுகிறது.

இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறுகிறது.

சரித் அசலங்கா தலை​மையி​லான இலங்கை அணி 2 ஆட்​டங்​களில் தோல்வி அடைந்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​ விட்​டது.

இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் நாளை மறுதினம் 28ஆம் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கான சிறந்த பயிற்சியாக அமையக்கூடும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version