Home இலங்கை குற்றம் கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

0

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெஹெல்பத்தர பத்மே சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தில் நாட்டில் வாங்கிய பல அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை

விசாரணைகளின் போது, சில சொத்துக்கள் அவரது ஆதரவாளர்களின் பெயர்களில் வாங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கூடுதலாக, கமாண்டோ சாலிந்தவின் பல சொத்துக்கள் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் உண்மைகளை தெரியப்படுத்தி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான தடை உத்தரவுகளைப் பெறுவோம் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெஹெல்பத்தர பத்மே தலைமையிலான மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்கள் உட்பட ஆறு பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர்.

கமாண்டோ சலிந்த, பாக்கோ சமன், பாணதுரே நிலங்க மற்றும் தெம்பிலி லஹிரு என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களும் அதில் அடங்குகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version