Home இலங்கை சமூகம் அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகள் : தீர்வுகளை பெறுவதற்கு புதிய வழி!

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகள் : தீர்வுகளை பெறுவதற்கு புதிய வழி!

0

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை ‘1924’ என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் ஆணையாளரும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் தலைவருமான ஜயந்த விஜயரட்ண (Jayantha Wijayaratna) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டச் செயலர்கள், அனைத்துப் பிரதேச செயலர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (11.03.2025) இன்று இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடு

மேலும் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் இதன் போது தெரியப்படுத்தப்பட்டது.

அத்துடன் அஸ்வெசும திட்டத்தின் நடைமுறையாக்கத்தில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணமே
சிறப்பாகச் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை ‘1924’ என்ற ஹொட்லைன் இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரையில் தொடர்பு கொள்வதன் ஊடாக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடக தீர்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

you may like this


https://www.youtube.com/embed/L-QD6SGO5V4

NO COMMENTS

Exit mobile version