Home இலங்கை சமூகம் அஸ்வெசும கொடுப்பனவில் மில்லியன் கணக்கில் மோசடி : அதிரடியாக கைது செய்யப்பட்ட புள்ளி

அஸ்வெசும கொடுப்பனவில் மில்லியன் கணக்கில் மோசடி : அதிரடியாக கைது செய்யப்பட்ட புள்ளி

0

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அலுவலக அதிகாரியொருவர் காவல்துறை நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஆவார்.

மேலதிக விசாரணை

குறித்த சந்தேகநபர், 4.1 மில்லியன் ரூபா அஸ்வெசும பணத்தை மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை நிதி குற்றப் பிரிவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version