Home இலங்கை சமூகம் யாழில் திடீரென மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு

யாழில் திடீரென மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – பாடசாலையொன்றில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஆசிரியை நேற்று முன்தினம் (16) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அ.த.க பாடசாலையின் ஆசிரியையான 49 வயதுடைய கலைவாணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலை சமூகம் 

இந்நிலையில் ஆசிரியைக்கு மூளையில் ஒரு கட்டி இருந்ததாக கூறப்படும் நிலையில், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு எப்போதும் முதல் ஆளாக வந்துவிடும் அவர், பிள்ளைகளை வழி நடத்தி வருவதுடன், பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் என்றும் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர் எனவும் பாடசாலை சமூகம் அவரை நினைவு கூர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/at-school-a-teacher-suddenly-died-1723950941

NO COMMENTS

Exit mobile version