Home இலங்கை அரசியல் பட்டலந்த வதை முகாம் : தமிழ் இனப்படுகொலையில் விசாரணையில் பாரிய திருப்புமுனை

பட்டலந்த வதை முகாம் : தமிழ் இனப்படுகொலையில் விசாரணையில் பாரிய திருப்புமுனை

0

பட்டலந்த வதை முகாம் விவகாரம் மறுபடியும் திறக்கப்படுமானால் தமிழர் இனப்படுகொலை குறித்து விசாரணைகள் தொடங்குவதற்கு வாயப்பாக அமையும் என அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பட்டலந்த வதை முகாம் விவகாரம் குறித்த விவகாரத்தை விசாரணை செய்வதன் மூலம் சிங்கள அரசியல்வாதிகளே தமிழ் மக்கள் விவகாரத்தை தானாக கையில் எடுப்பார்கள்.

இதற்கு தமிழ் தலைவர்கள் காரணமாக அமைய போவதில்லை, இது தொடர்பில் சிங்கள தலைவர்களுக்கு இடையிலான அடிபாடுகள் ஏற்படும் போது நாம் பட்டலந்த வதை முகாம் விவகாரம் குறித்த விசாரணை வேண்டும் என தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பில், நாம் கேள்வி எழுப்பும் போது கட்டாயம் அதனை மறுக்க முடியாது அத்தோடு நீதியை வழங்க வேண்டும் என்பது அங்கு கட்டாயமாக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரம், பட்டலந்த வதை முகாம் விவகாரம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆட்சியில் தமிழ் மக்களுக்கான நீதி தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வரகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/seE1xl2MmG4

NO COMMENTS

Exit mobile version