Home இலங்கை சமூகம் இளம் காதலர்களின் மோசமான செயல் – அதிர்ச்சியில் நண்பி

இளம் காதலர்களின் மோசமான செயல் – அதிர்ச்சியில் நண்பி

0

காலி, அஹுங்கம பிரதேசத்தில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கள் நண்பியின் வீட்டிற்கு சென்ற காதல் ஜோடி நண்பியின் ஏடிஎம் அட்டையை திருடி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

திருடிய ஏடிஎம் அட்டையின் மூலம் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இளம் காதலர்கள்

கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் அவருடை காதலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பியின் வீட்டிற்கு சென்றிருந்த போது அவருக்கு தெரியாமல் அதனை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/atm-stolen-lovers-in-gampaha-1721712318

NO COMMENTS

Exit mobile version