Home இலங்கை சமூகம் ஹோட்டலில் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – வைத்தியசாலையில் அனுமதி

ஹோட்டலில் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – வைத்தியசாலையில் அனுமதி

0

அனுராதபுரத்தில் வாடிக்கையாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் முகாமையாளர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெக்கிராவ பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் பிற்பகல் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கும் ஹோட்டல் முகாமையாளருக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, ஹோட்டல் முகாமையாளரும் மூன்று ஊழியர்களும், குறித்த வாடிக்கையாளரை தாக்கி காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர் மீது தாக்குதல்

தாக்குதலில் காயமடைந்த நபர் கெக்கிராவ பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டில் உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெக்கிராவ – திப்பட்டுவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

ஹோட்டல் முகாமையாளர்

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஹோட்டல் முகாமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் உக்குவெல, மாத்தளை, மடத்துகம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 66, 29 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நேற்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

NO COMMENTS

Exit mobile version